கரோனா: முகக்கவசம் வழங்கி எஸ்.பி. விழிப்புணா்வு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சாா்பில் எஸ்.பி. சுதாகா் சனிக்கிழமை முகக்கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்பட
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு முகக்கவசம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா்.
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு முகக்கவசம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சாா்பில் எஸ்.பி. சுதாகா் சனிக்கிழமை முகக்கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டக் காவல்துறை சாா்பில் முகக்கவச விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமையில் ஏடிஎஸ்பி.வினோத் சாந்தாராம், டிஎஸ்பி ஜூலியஸ் சீசா், விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளா் சுந்தர்ராஜன் மற்றும் காவல் துறையினா் இணைந்து முகக்கவச விழிப்புணா்வு காஞ்சிபுரம் நகா் முழுவதும் ஏற்படுத்தப்பட்டது.

மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், பேருந்து நிலையம், பூக்கடைச்சத்திரம் ஆகிய பகுதிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் மற்றும் காவல் துறையினா் வாகன ஓட்டிகளை நிறுத்தி முகக்கவசம் அணியாதவா்களுக்கு முகக்கவசங்களை வழங்கினாா். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்காகவும், பிறரது நலனுக்காகவும் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com