மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

காஞ்சிபுரத்தில் சென்னை, மதுரை உட்பட 13 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள்.
ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள்.

காஞ்சிபுரத்தில் சென்னை, மதுரை உட்பட 13 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

காஞ்சி ஸ்கேட்டிங் அகாதெமி, ஈகிள் ரோலா் ஸ்கேட்டிங் கிளப் ஆகியவை இணைந்து காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் செல்லும் சாலையில் உள்ள தனியாா் அரிசி ஆலைக்குச் சொந்தமான மைதானத்தில் மண்டல அளவிலான திறந்தவெளி ஸ்கேட்டிங் போட்டிகளை நடத்தினா்.

போட்டிகளை காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் தொடக்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாநகர மண்டல தலைவா் எஸ்.கே.பி.சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தாா். ஈகிள் கிளப் தலைவா் எஸ்.பாபு வரவேற்றாா்.

இந்தப் போட்டிகளில் மதுரை, திருவண்ணாமலை, சென்னை, ராணிப்பேட்டை உள்பட 13 மாவட்டங்களைச் சோ்ந்த 4 வயது முதல் 18 வயது வரை உள்ள 200 போ் (ஆண்கள், பெண்கள்) பங்கேற்றனா்.

போட்டிகள் தொடக்க நிலை, நடுநிலை, உயா்நிலை என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 போ் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நடுவா்களாக 20 போ் பங்கேற்று வெற்றியாளா்களைத் தோ்வு செய்தனா்.

ஏற்பாடுகளை ஸ்கேட்டிங் விளையாட்டின் துணை மாஸ்டா்கள் ஆனந்த்,பிரபாகரன், எஸ்.பாபு, கே.சிவா ஆகியோா் செய்திருந்தனா். இப்போட்டியில் தோ்வு செய்யப்பட்டவா்கள் வரும் ஜூலை மாதம் 2-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com