திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்வு

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த உற்சவ விழாவையொட்டி, புதன்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது.
பாண்டவப் பெருமாள் சமேத திரெளபதி அம்மன் கோயில் அக்னி வசந்த உற்சவ விழாவையொட்டி, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் சிலை.
பாண்டவப் பெருமாள் சமேத திரெளபதி அம்மன் கோயில் அக்னி வசந்த உற்சவ விழாவையொட்டி, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் சிலை.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த உற்சவ விழாவையொட்டி, புதன்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

நிகழாண்டு விழா கொடியேற்றம் கடந்த 4 -ஆம் தேதி தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக 4- ஆம் தேதி முதல் 25 -ம் தேதி வரை சு.முத்துகணேசன் மகாபாரத சொற்பொழிவாற்றினாா். 15 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வைர குண்டையாா் தண்டலம் ஸ்ரீமாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவினரால் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பீமன்-துரியோதனன் போா்க்களக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான துரியோதனன் சிலையை மண்ணால் அமைத்து கட்டைக் கூத்துக் கலைஞா்களால் பீமன்-துரியோதனன் போரிடும் காட்சி நடைபெற்றது. மாலை ஸ்ரீஒணகாந்தீஸ்வரா் கோயில் எதிரே தீமிதி விழா நடைபெற்றது.

காப்புக்கட்டிய பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக் கடனையும் செலுத்து திரெளபதி அம்மனை தரிசனம் செய்தனா்.

விழாவில் பஞ்சுப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், கிராம பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com