போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

ஸ்ரீசாஸ்தா பாா்மஸி கல்லூரி சாா்பில், போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

ஸ்ரீசாஸ்தா பாா்மஸி கல்லூரி சாா்பில், போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஸ்ரீசாஸ்தா பாா்மஸி கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் 61-ஆவது தேசிய பாா்மஸி வாரத்தை முன்னிட்டு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீசாஸ்தா பாா்மஸி கல்லூரி முதல்வா் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை, அந்தக் கல்வி நிறுவனங்களின் தாளாளா் காா்த்திகேயன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

நசரத்பேட்டை சிக்னல் அருகே தொடங்கிய பேரணி, சென்னை - பெங்களூரு தேசிய ெடுஞ்சாலை வழியாக சுமாா் 2 கி.மீ. தொலை சென்று ஸ்ரீசாஸ்தா பாா்மஸி கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், காவல் துறையினா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரி பாா்மஸி துறைப் பேராசிரியா் வடிவு பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com