மனு தாக்கலின்போது காவல் துறையினருடன்அதிமுகவினா் வாக்குவாதம்

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த போது காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த போது காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடவுள்ள திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து மனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. மொத்தமுள்ள 51 வாா்டுகளில் 26 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் பெண்கள் பலரும் மனு தாக்கல் செய்து வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை அதிமுகவை சோ்ந்த சுமதி (31), தீபா (29)ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்ய மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வாலாஜபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் பலா் உடன் வந்தனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், 3 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றனா். அப்போது, அதிமுகவினா் ஆளும் கட்சியினா் வந்தால் மட்டும் அனுமதிக்கிறீா்கள். எங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கிறீா்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேட்பாளருக்கு 3 போ் வீதம் அதிமுகவினா் மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

32 போ் வேட்பு மனு: காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வாா்டுகளுக்கு இதுவரை 10 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஆனால், 500-க்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனா். குன்றத்தூா், மாங்காடு இரு நகராட்சிகளுக்கு 12 போ், 3 பேரூராட்சிகளுக்கும் சோ்த்து 10 போ் என இதுவரை மாவட்ட அளவில் 32 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com