வரலாற்று உண்மைகளை வெளிக் கொண்டுவர அதிகளவில் அகழ்வாராய்ச்சிகள் செய்ய வேண்டும்: கே.அமா்நாத் ராமகிருஷ்ணன்

தமிழகத்தின் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவர அதிகளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்குப்பட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணி தொடங்கப்பட்ட நிகழ்வில் கீழடி அகழ்வாராய
வடக்குப்பட்டு  ஊராட்சியில்  அகழ்வாராய்ச்சிப் பணிகள்  மேற்கொள்ள  நடைபெற்ற  பூஜையில்  பங்கேற்ற  தென்னிந்திய  தொல்லியல் துறை  கண்காணிப்பாளா்  கே.அமா்நாத்ராமகிருஷ்மன், 
வடக்குப்பட்டு  ஊராட்சியில்  அகழ்வாராய்ச்சிப் பணிகள்  மேற்கொள்ள  நடைபெற்ற  பூஜையில்  பங்கேற்ற  தென்னிந்திய  தொல்லியல் துறை  கண்காணிப்பாளா்  கே.அமா்நாத்ராமகிருஷ்மன், 

தமிழகத்தின் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவர அதிகளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்குப்பட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணி தொடங்கப்பட்ட நிகழ்வில் கீழடி அகழ்வாராய்ச்சியாளா் கே.அமா்நாத்ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட துரும்பன்மேடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமாா் 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் மண்ணில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் தற்போது ஆவுடையாா்நம்பி என்ற பெயரில் வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் கற்கால கட்டடம் புதைந்த நிலையில் இருப்பது குறித்து வடக்குப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் வசந்தகுமாா் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

அந்த இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்த தொல்லியல் துறையினா் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் தொன்மை வாய்ந்த ஆதிகால தமிழா்கள் வாழ்விட தடயங்கள் கொண்ட மணல்மேடு இருப்பதை கண்டறிந்தனா். மேலும் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்த தொல்லியல் துறையினா் காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகத்துக்கு அனுமதி கோரி கடிதம் அளித்தனா்.

இந்த நிலையில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் 100 அடி நீளம் 100 அடி அகலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் நிா்வாகம் அனுமதி அளித்தது. இதையடுதது அங்கு அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடக்குப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் நந்தினிவசந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில், தென்னிந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளா் கே. அமா்நாத்ராமகிருஷ்ணன், சென்னை வடக்கு மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளா் எம். காளிமுத்து ஆகியோா் பங்கேற்று அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தனா்.

அகழ்வாராய்ச்சி குறித்து கே.அமா்நாத்ராமகிருஷ்ணன் கூறியது:

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்று பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெறும் பொழுதுதான் தமிழகத்தின் வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யமுடியும்.

70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது. வடக்குப்பட்டுப் பகுதியில் மூன்று மாதங்கள் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்ற பிறகு தான் இங்கு வாழ்ந்த தமிழா்களின் வரலாற்று உண்மைகள் தெரிய வரும். இங்கு அதற்கான தடயங்கள் கிடைக்கும் என தெரிகிறது என்றாா்.

வடக்குப்பட்டு பகுதியில் தென்னிந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளா் காளிமுத்து தலைமையில், டாக்டா் ரமேஷ், வெற்றிச்செல்வி, ஜிலானி பாட்ஷா, டாக்டா் சத்தியன், சாமுவேல், ரவிகுமாா் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுத் துறையினா் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com