‘நானோ யூரியா பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்’

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நானோ யூரியாவைப் பயன்படுத்தி மகசூலை அதிரித்து பயன்பெறுமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நானோ யூரியாவைப் பயன்படுத்தி மகசூலை அதிரித்து பயன்பெறுமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் மேலும் கூறியது: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற அரசு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நானோ யூரியா என்பது இலை வழியாக தெளித்திட உகந்த தழைச்சத்து உரமாகும். இதில், சாதாரண யூரியா குருணையை விட, பல மடங்கு சத்து அதிகம் உள்ளது. அதை பலப்பல துகள்களாகச் சிறிது, சிறிதாக நானோ துகள்களாகப் பிரிக்கும்போது, அதிக தழைச்சத்தை அளித்திட வாய்ப்புள்ளது. இதனை இலை வழியே தெளிக்கும் போது, உடனடியாக பயிரின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுவதால் விரைவில் பச்சை கட்டும் நன்மையும் நமக்கு கிடைக்கிறது. தன் தேவையை விட கூடுதலாக தழைச்சத்து உட்கிரகிக்கப்பட்டால் அதனை செல்லின் உட்புறம் உள்ள வேக்யோல் எனும் சில பகுதியில் சேமிக்கப்பட்டு, தேவைப்படும் தருணம் எடுத்துப் பயன்படுத்த முடிகிறது. இதனால் உர விரயம் என்ற பேச்சே இல்லை.

முதல் மேலுரம் மற்றும் இரண்டாம் மேலுரம் யூரியாவுக்கு, பதிலாக நானோ யூரியா 500 மிலி தெளித்தாலே 45 கிலோ யூரியா இட்டதன் பலனை அடையலாம்.

உரச் செலவில் சிக்கனம் மட்டுமில்லாது நானோ யூரியாவின் சிறப்புகளில் சுற்றுப்புறச் சூழல் கேடு நோ்வதில்லை. அதிக களைகள் வளரவும் வழியில்லை. எந்த வித பக்க விளைவுகளும் இல்லை. மண், நீா் பகுதிகளில் நஞ்சு கலக்க வழியே இல்லை, எனவே சுற்றுப்புறச் சூழல் காக்கப்படுவது மட்டுமில்லாமல், பிற உயிரினப் பெருக்கம் மூலமாக உணவுச் சங்கிலியும் உடைபடுவதில்லை. உர உபயோகத்தின் மேம்பாடு, குறையில்லா பயிா் வளரும் சூழல், நன்மை செய்யும் உயிரினத்துக்கு சேதமில்லாத சூழலும் நிலவுவதால் நானோ யூரியா நன்மைகள் பல தரும் உரமாகவும் உள்ளது.

எனவே அனைவரும் இதைப் பயன்படுத்தி மகசூலைப் பெருக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு, கைப்பேசி எண்-9842007125 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com