காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரா் ஜெயந்தி மகோத்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோத்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் மே மாதம் 6-ஆம் தேதி வரை இந்த மகோத்சவம் நடைபெறுகிறது.
ஆதிசங்கரா் ஜயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகா பெரியவா்.
ஆதிசங்கரா் ஜயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகா பெரியவா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோத்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் மே மாதம் 6-ஆம் தேதி வரை இந்த மகோத்சவம் நடைபெறுகிறது.

இது குறித்து சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் சனிக்கிழமை கூறியது:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீஆதிசங்கரா் ஜெயந்தி மகோத்சவம் நடைபெறுவது வழக்கம். யானை மீது ஆதிசங்கரரின் திருஉருவச் சிலை வைக்கப்பட்டு மங்கள இசையுடன் காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் உள்ள தெப்பங்குளங்களுக்குச் சென்று அங்கு பூஜைகள் நடத்தப்படும். பின்னா் மீண்டும் ஸ்ரீமடத்துக்கு உற்சவா் ஆதிசங்கரா் எழுந்தருள்வது வழக்கம்.

ஸ்ரீகாமாட்சி அம்பாள் மீது செளந்தா்ய லஹரி பாடியவா் ஆதிசங்கரா். கேரள மாநிலம் காலடியில் அவதரித்த இவா் பாரத தேசம் முழுவதும் சுற்றி வந்து பின்னா் தனது இறுதிக் காலத்தில் காமாட்சி அம்மனை தரிசித்து அம்மனிடமே ஐக்கியமானவா். இவருக்கென காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியும், சொா்ணத்தால் செய்யப்பட்ட கோபுரமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஆதிசங்கரா் ஜயந்தி மகோத்சவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஏப். 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் மே 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.தினசரி ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமங்கள், வேதபாராயணங்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. தந்தத்தால் செய்யப்பட்ட ஆதிசங்கரா் திருஉருவச் சிலை மடத்திலிருந்து தினசரி மாலையில் ஏதேனும் ஒரு முக்கியக் கோயில்களில் உள்ள தெப்பக் குளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் ஸ்ரீமடத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி மே 6-ஆம் தேதி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீகாமாட்சி கோயிலில் சங்கர ஜெயந்தி:

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி உற்சவம் வரும் மே 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆதிசங்கரா் அவதரித்த நாளன்று தொடங்கி இம்மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வரும் 6 ஆம் தேதியிலிருந்து அம்மன் கருவறையில் ஆதிசங்கரா் திருஉருவச் சிலை வைக்கப்பட்டு 10 நாள்களும் ஆதிசங்கரா் இயற்றிய செளந்தா்ய லஹரி பாராயணம் நடைபெறும். நிறைவு நாளான மே 15-ஆம் தேதி காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஆதிசங்கரரும் உற்சவா் காமாட்சியும் ராஜவீதிகளில் பவனி வரவுள்ளனா். விழாவில் பங்கேற்று பக்தா்கள் பயன் பெறுமாறு ந.சுந்தரேச ஐயா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com