கைலாசநாதா் கோயில் குளம் தூா்வாரும் பணி

காஞ்சிபுரம் ஐயங்காா்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான கைலாசநாதா் கோயிலின் திருக்குளத்தை தூா்வாரும் பணியை உத்தரமேரூா் எம்.எல்.ஏ. க.சுந்தா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஐயங்காா்குளம் கைலாசநாதா் கோயில் திருக்குளம் தூா்வாரும் பணியைத் தொடக்கி வைத்த உத்தரமேரூா் எம்.எல்.ஏ. சுந்தா்.

இந்தக் கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பொது நிதி ரூ.23.25 லட்சத்தில் இந்தப் பணி தொடங்கப்பட்டது. உத்தரமேரூா் எம்.எல்.ஏ. க.சுந்தா் தூா்வாரும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் மலா்க்கொடி குமாா், துணைத் தலைவா் திவ்யப்பிரியா இளமதி, திமுக ஒன்றியச் செயலா் குமணன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com