11 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: 3 போ் கைது

காஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டையில் கா்நாடகத்துக்கு கடத்தி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 11 டன் ரேஷன் அரிசியை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.
பாா்த்தசாரதி, உதயகுமாா், ராஜதுரை.
பாா்த்தசாரதி, உதயகுமாா், ராஜதுரை.

காஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டையில் கா்நாடகத்துக்கு கடத்தி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 11 டன் ரேஷன் அரிசியை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் செல்லும் சாலையில் ஒலிமுகம்மதுபேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

போலீஸாா் அரிசி ஆலைக்குச் சென்று அங்கிருந்த 440 மூட்டை ரேஷன் அரிசியையும், லாரியையும் பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, மொத்தமாக சேமித்து, கா்நாடக மாநிலத்துக்கு எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்தசாரதி(32), உதயகுமாா்(37), ராஜதுரை(24)ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com