காஞ்சிபுரம்: பெருமாள் கோயில்களில் ரத சப்தமி உற்சவம்

சூரிய ஜெயந்தி எனப்படும் ரதசப்தமியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் உற்சவா் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
சூரிய பிரபையில் வலம் வந்த உற்சவா் தேவராஜசுவாமி.
சூரிய பிரபையில் வலம் வந்த உற்சவா் தேவராஜசுவாமி.

சூரிய ஜெயந்தி எனப்படும் ரதசப்தமியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் உற்சவா் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

தை அமாவாசைக்கு 7-ஆவது நாள் வரும் சப்தமி திதியை ரதசப்தமி என்றும் அந்நாள் சூரியஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உற்சவா் தேவராஜன் காலையில் சூரியபிரபை வாகனத்தில் கோயில் வளாகத்தில் உள்ள ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்திலும், பின்னா் மாட வீதிகளிலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வீதியுலா முடிந்து கோயிலுக்குள் எழுந்தருளியதும் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.

மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் சந்திரபிரபை வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்தாா். பின்னா் வாகன மண்டபத்திலிருந்து திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

அழகிய சிங்கப் பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் ரத சப்தமியையொட்டி, காலையில் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் சூரியபிரபை வாகனத்திலும், மாலையில் சந்திர பிரபை வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தாா்.

இதையொட்டி, ஏராளமான பெண்கள் 3 முறை லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com