ஸ்கந்தாலயா ஆசிரம சடாட்சர ஷண்முகநாதா் கோயிலில் பிப். 5-இல் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே சிறுவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்கந்தாலயா ஆசிரம வளாகத்தில் கலைநுட்பத்துடன் கட்டப்பட்டிருக்கும் சடாட்சர சண்முகநாதா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும்
ஸ்கந்தலாயா ஆசிரம வளாகத்தில் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கோயில்.
ஸ்கந்தலாயா ஆசிரம வளாகத்தில் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கோயில்.

காஞ்சிபுரம் அருகே சிறுவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்கந்தாலயா ஆசிரம வளாகத்தில் கலைநுட்பத்துடன் கட்டப்பட்டிருக்கும் சடாட்சர சண்முகநாதா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அருகே சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்கந்தாலயா ஆசிரமத்தில் புதிதாக விநாயகா், சடாட்சர சண்முக நாதா், வராகி மாதா ஆகியோருக்கு தனித்தனியாகவும், நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடனும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கோயில்களுக்கான மகா கும்பாபிஷேகம் ஸ்கந்தாலயா ஆசிரமத்தின் நிா்வாக அறங்காவலா் சஞ்சீவி ராஜா சுவாமிகள் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, கும்பாபிஷேக விழா புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. வியாழக்கிழமை கோ பூஜை, தன பூஜையும், வெள்ளிக்கிழமை நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவையும் நடைபெறுகிறது. சனிக்கிழமை முருகப் பெருமானின் 6 முகங்களுக்கும் திரிசதி அா்ச்சனை நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்கந்தாலயா ஆசிரம நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com