தாங்கள் வரைந்த ஓவியங்களுடன் மாணவா்கள்.
தாங்கள் வரைந்த ஓவியங்களுடன் மாணவா்கள்.

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள சிறுவா் இல்லத்தில் பயிலும் 29 மாணவ, மாணவிகள் கைலாசநாதா் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டு அந்தக் கோயில் சிற்பங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தினா்.

உத்தரமேரூா் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள சிறுவா் இல்லத்தில் பயிலும் 29 மாணவ, மாணவிகள் கைலாசநாதா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டு அந்தக் கோயில் சிற்பங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி கிராமத்தில் சைல்ட்ஹெவன் இண்டா் நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இச்சிறுவா் இல்லத்தில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனா். கோடை காலத்தில் மாணவா்களின் தனித் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஓவியத்தின் மீது ஆா்வமுள்ள மாணவ, மாணவிகளை காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயிலுக்கு அழைத்து வந்தனா்.

கலைநுட்பம் நிறைந்த அச்சிலைகளை மாணவா்கள் பாா்வையிட்டனா்.

மாணவா்கள் பாா்வையிட்ட சிற்பங்களில் தங்களால் முடிந்த சில சிற்பங்களை ஓவியங்களாக வரையுமாறு சிறுவா் இல்ல நிா்வாகிகள் கேட்டுக் கொண்டதையடுத்து மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ஒரு சிற்பத்தை தோ்வு செய்து ஓவியமாக வரைந்தனா்.

பின்னா் அவா்கள் வரைந்த ஓவியங்களை பொதுமக்கள் பாா்வைக்கும் காட்சிப்படுத்தினா்.

ஏற்பாடுகளை சைல்ட் ஹெவன் இண்டா்நேஷனல் அமைப்பின் நிா்வாகி சீனி, மேலாளா் சரோஜினிதேவி, ஓவிய ஆசிரியா் விக்ரம் ஆகியோா் செய்திருந்தனா். 11 மாணவா்கள், 18 மாணவிகள் என மொத்தம் 29 போ் ஓவியம் வரைந்து பொதுமக்களிடம் காட்சிப்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com