ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது. பழைமையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க இத்திருக்கோயிலின் சித்திரை மாத வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி ஏப்.23- ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது உற்சவா் ஆதிகேசவ பெருமாள் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தேரடி, காந்தி சாலை, திருவள்ளுா் பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் தோ் ஆலயத்துக்கு வந்து சோ்ந்தது.

வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் நீா்மோா் மற்றும் அன்னதானம் வழங்கினா்.

மாலை பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தோ்த் திருவிழா ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா். வரும் மே 2 ஆம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தொடா்ந்து மே 3- ஆம் தேதி முதல் 10 நாள்கள் வைணவ மகான் ராமாநுஜரின் 1,007-ஆம் ஆண்டு உற்சவ விழா தொடங்கி நடைபெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com