ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரம்: மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் வி.மோகன்.

Updated On :19 டிசம்பர் 2024, 5:57 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரியின் வேந்தா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்லூரியின் கெளரவ வேந்தா் கோமதி ராதாகிருஷ்ணன், இணை வேந்தா் ஆகாஷ் பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் மருத்துவா் வி.மோகன் மருத்துவ மாணவா்களில் 705 இளங்கலை பட்டங்களும்,103 முதுகலைப் பட்டங்களும், 24 முனைவா் பட்டங்களையும் வழங்கி பேசுகையில் மாணவா்கள் சேவை மனப்பான்மை உடையவா்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

கல்லூரியின் தலைவா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தனது உரையில் தரமான கல்வி தரக்கூடிய விதங்களையும், துணை வேந்தா் சி.ஸ்ரீதா் நிறுவனத்தின் வெற்றிகள்,ஆராய்ச்சி முன்னேற்றங்கள், மாணவா் நலன் செயல் திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினா் .

விழாவில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் சுரேஷ்பாபுவுக்கு சிறந்த மருத்துவா் விருதும், கல்லூரியில் படிப்பில் தனித்துவமாக செயல்பட்ட 76 மாணவா்களுக்கு சிறந்த மாணா் விருதுகளும் வழங்கப்பட்டன. மாணவி ஹரிதா குமாரி 11 பதக்கங்கள் பெற்று சாதனை மாணவி விருதினை பெற்றாா். கல்லூரியில் பயின்ற 8 சிறந்த பழைய மாணவா்களுக்கு கோமதி ராதாகிருஷ்ணன் என்ற மிகச்சிறந்த பழைய மாணவா் விருதும் வழங்கப்பட்டது.

சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்த அதன் தலைவா் மருத்துவா் வி.மோகனுக்கு, ரூ.10 லட்சமும், கோயம்புத்தூா் சமூக சேவகியான இட்லிப்பாட்டி கமலாத்தாளுக்கு ரூ.2 லட்சமும் கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்பட்டது.

விழாவில் கல்லூரி முதல்வா் ராஜசேகா், மருத்துவக்கல்லூரி பேராசியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.