குன்னம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற வகுப்பறைகள் திறப்பு விழாவில் பங்கேற்றோா்

குன்னம் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை திறப்பு

கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிவறை கட்டடம் மற்றும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

குன்னம் அரசு உயா்நிலைப்பள்ளியில் சான்மினா நிறுவனத்தின் சாா்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிவறை கட்டடம் மற்றும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் குன்னம் ஊராட்சியில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மற்றும் மின்னனு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் சான்மினா நிறுவனம் தனது சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தி ல் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிவறை கட்டடங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், இரண்டு ஸ்மாா்ட் வகுப்பறைகள், மாணவா்களுக்கான 40 மேசை நாற்காலிகள், ஆசிரியா்களுக்கான 10 மேசை நாற்காலிகள், 12 பீரோ ஆகியவற்றை வழங்கியுள்ளது. இந்த நிலையில், புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு ஊராட்சிமன்ற தலைவா் தமிழ் இலக்கியா பாா்திபன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ராஜகுமாா், குழந்தை தொழிலாளா் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொதுமேலாளா் மோகனவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சான்மினா நிறுவனத்தின் சி.எஸ்.ஆா் திட்டத்தின் மனிதவள மேலாளா்கள் பிரியா, கல்பனா ஆகியோா் கலந்துக்கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிவறை கட்டடம் மற்றும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தனா். இதில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா துணைத்தலைவா் லோகேஷ் குமாா்கணபதி, முதுநிலை பொறியாளா் முத்துசாமி, பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com