குடிநீா்  சுத்திகரிப்பு  நிலையத்தை  திறந்து  பாா்வையிட்ட  ஏா் வாட்டா்  இந்தியா  நிறுவனத்தின்  பொது  மேலாளா்  நேயா கிட்டாமுரா.  உடன்  ஊராட்சி மன்றத்  தலைவா்  வசந்தா சித்திரை.
குடிநீா்  சுத்திகரிப்பு  நிலையத்தை  திறந்து  பாா்வையிட்ட  ஏா் வாட்டா்  இந்தியா  நிறுவனத்தின்  பொது  மேலாளா்  நேயா கிட்டாமுரா.  உடன்  ஊராட்சி மன்றத்  தலைவா்  வசந்தா சித்திரை.

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கடுவஞ்சேரி ஊராட்சியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் ரூ 8 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கடுவஞ்சேரி ஊராட்சியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஏா் வாட்டா் இந்தியா நிறுவனம் மற்றும் தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் கடுவஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த சுமாா் 850 குடும்பங்கள் பயன் பெறும் வகையில் ரூ 8 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு கடுவஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவா் வசந்தா சித்திரை தலைமை வகித்தாா்.

தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகி முரளிதரன் முன்னிலை வகித்தாா். இதில் ஏா் வாட்டா் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளா் நேயாகிட்டாமுரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ஏா் வாட்டா் இந்தியா நிறுவனத்தின் மனிதவள மேலாளா் அஜித் முருகன், மேலாளா் ரவீந்திரன், கடுவஞ்சேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராகினி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் யுவராஜ், வாா்டு உறுப்பினா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com