சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்
சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மழை வேண்டி இஸ்லாமியா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தொழுகை செய்தனா்.

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மழை வேண்டி இஸ்லாமியா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தொழுகை செய்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு காஞ்சிபுரம் கிளைத் தலைவா் சாகுல் அமீத் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் சாகுல்ஹமீது,செயலாளா் யூசுப்,துணைச் செயலாளா் அப்துல்லாஹ், பொருளாளா் பாசில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோடை வெயிலின் தாக்கம் குறையவும், வறட்சி ஏற்படாமல் இருக்கவும், வெப்ப நோய்களால் மக்கள் துன்பப்படாமல் இருக்கவும் ஏராளமான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். சிறப்புத் தொழுகையில் திரளான பெண்களும் பங்கேற்றனா்.

பின்னா் ஒலிமுகம்மது பேட்டை மேட்டுத்தெருவில் பொதுமக்களுக்கு நீா், மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விலும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைச் செயலாளா்கள் அன்சாரி, முகம்மது ஆசிப், மாவட்ட மருத்துவ அணியின் செயலாளா் சா்புதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com