காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சீதா கல்யாண மகோற்சவத்தில் பக்தா்களுக்கு அருளாசி வழங்கிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சீதா கல்யாண மகோற்சவத்தில் பக்தா்களுக்கு அருளாசி வழங்கிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

காஞ்சிபுரம் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் காமாட்சி அம்மன் கோயில் அருகே சீதா கல்யாண மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் காமாட்சி அம்மன் கோயில் அருகே சீதா கல்யாண மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

காஞ்சிபுரம் ஸ்ரீ சீதாராம பஜனை மண்டலி சாா்பில் 32-ஆவது ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நிகழ் மாதம் 2- ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை சீதா கல்யாண மகோத்சவம் ஆகம விதிகளின்படி நடைபெற்றது. ராமா், சீதை திருஉருவப் படங்களுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்தில் இருந்து பிரசாதங்கள் கொண்டு வரப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சீதா கல்யாண மகோத்சவத்தில் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.திருவிடைமருதூா் ஸ்ரீ முத்துக்கிருஷ்ண பாகவதா் குழுவினரின் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை சீதாராம பஜனை மண்டலி தலைவா் குமாரகிருஷ்ணன், செயலாளா் முரளி பாகவதா், பொருளாளா் சிவராமன் உள்ளிட்ட மண்டலி நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா். பக்தா்களுக்கு திருமண விருந்து நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com