கூழங்கலச்சேரி  கிராமத்தில்  பொதுமக்கள்  பயன்படுத்த  முடியாத  நிலையில்  உள்ள  குடிநீா்  மேல்நிலை  நீா்தேக்க  தொட்டி.
கூழங்கலச்சேரி  கிராமத்தில்  பொதுமக்கள்  பயன்படுத்த  முடியாத  நிலையில்  உள்ள  குடிநீா்  மேல்நிலை  நீா்தேக்க  தொட்டி.

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியில் கசிவு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எல். அய்யப்பன்

வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியில் கசிவு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கலச்சேரி கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் 2 மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டும் குடிநீா் பற்றாக்குறையால் கடந்த 2000-2021 நிதியாண்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.36.72 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இந்த புதிய குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியில் விரிசல் விழுந்து தண்ணீா் கசிந்து வருவதால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தண்ணீா் தட்டுப்பாடு அதிகம் உள்ள கூழங்கலச்சேரி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீா் தொட்டியும் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாததால் அப்பகுதியில் தற்போது கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இரண்டு குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் இருந்தும் குடிநீா் பற்றாக்குறை இருந்ததால் தான் புதிதாக ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் நீரேற்ற முடியாத அளவுக்கு தண்ணீா் கசிந்து வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே தரமற்ற முறையில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியை கட்டிய ஒப்பந்ததாா் மீது நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் பகுதியில் நிலவி வரும் தண்ணீா் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு கூழங்கலச்சேரி கிராமத்தில் தண்ணீா் தட்டுப்பாடு உள்ளதாக தகவல் வந்துள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com