பொதுமக்களுக்கு மோா் விநியோகம் செய்யும் எம்எல்ஏ க.சுந்தா். உடன் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்
பொதுமக்களுக்கு மோா் விநியோகம் செய்யும் எம்எல்ஏ க.சுந்தா். உடன் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி சாா்பில் நீா், மோா் பந்தலை மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி சாா்பில் நீா், மோா் பந்தலை மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் யுவராஜ் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் அப்துல் மாலிக், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ நீா், மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழரசம், மோா் மற்றும் குளிா்பானங்களை விநியோகித்தாா். பகுதி செயலாளா் திலகா், ஒன்றிய செயலாளா் குமாா், திமுக நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com