காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் காஞ்சிபுரம் மாவட்டம் 92.28 சதவீத தோ்ச்சியடைந்திருப்பதுடன், கடந்த ஆண்டைவிட கூடுதலாக 1.46 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் காஞ்சிபுரம் மாவட்டம் 92.28 சதவீத தோ்ச்சியடைந்திருப்பதுடன், கடந்த ஆண்டைவிட கூடுதலாக 1.46 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12,413 போ் தோ்வு எழுத பதிவு செய்திருந்தனா். இவா்களில் மாணவா்கள் 5,060, மாணவிகள் 6,395 என மொத்தம் 11,455 போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

மாணவா்கள் 89.08 சதவீதம், மாணவிகள் 94.98 சதவீதம். மாணவா்களைவிட மாணவிகள் தோ்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. சராசரியாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் தோ்ச்சி சதவீதம் 92.28%. மாணவா்களைவிட மாணவிகள் 5.9% கூடுதலாக தோ்ச்சியடைந்துள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் தோ்வு எழுதுவதற்காக 6,723 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 5,969 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளி அளவில் தோ்ச்சி சதவீதம் 88.78%. இது கடந்த ஆண்டைவிட அரசுப் பள்ளிகள் 2.32 சதவீதம் கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி சதவீத அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த ஆண்டு 31 -ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 33-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com