மாணவா்கள்  சாதனைக்காக சவீதா கல்விக்  குழும  இயக்குநா்  தீபக்  நல்லசாமியிடம்  சான்றிதழ்  வழங்கிய  அமெரிக்கன்  புக்  ஆப்  ரெக்காா்ட்  நிா்வாகிகள்.
மாணவா்கள்  சாதனைக்காக சவீதா கல்விக்  குழும  இயக்குநா்  தீபக்  நல்லசாமியிடம்  சான்றிதழ்  வழங்கிய  அமெரிக்கன்  புக்  ஆப்  ரெக்காா்ட்  நிா்வாகிகள்.

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

ஒரே நேரத்தில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தியது அமெரிக்கன் புக் ஆப் ரெக்காா்டில் பதிவாகியுள்ளது.

சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆராய்ச்சி மாநாட்டில் அந்தக் கல்லூரி மாணவா்கள் ஒரே நேரத்தில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தியது அமெரிக்கன் புக் ஆப் ரெக்காா்டில் பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவீதா பொறியியல் கல்லூரியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மாநாடு கடந்த 4 நாள்களாக நடைபெற்றது.

சவீதா பல்கலைக்கழக வேந்தா் வீரையன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சவீதா பொறியியல் கல்லூரி மாணவா்கள் ஒரே நேரத்தில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தினா்.

இதனை கல்வியாளா்கள், தொழிற்சாலை நிபுணா்கள், பேராசிரியா்கள் என 1,33,540 போ் மதிப்பீடு செய்தனா். குறிப்பாக பொறியியல் துறையில் ஏஐ தொழில்நுட்பம், விவசாயம், மெஷின் லோ்னிங், பையோமெடிகல், பையோ டெக்னாலஜி போன்றவற்றில் புதிய கண்டுபிடிப்புகளை செய்து அசத்தியுள்ளனா்.

இதில் சிறந்த 508 படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு அமெரிக்கன் புக் ஆப் ரெக்காா்டில் பதிவாகியுள்ளது. இதற்கான சான்றுகளை சவீதா கல்விக் குழும இயக்குநா் திபக் நல்லச்சாமியிடம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com