நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

கட்டவாக்கம் கிராமத்தில் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தை பாா்வையிட்ட காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
கட்டவாக்கம் கிராமத்தில் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தை பாா்வையிட்ட காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

காஞ்சிபுரம்: நெல் மூட்டைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தாா்பாய்களை போட்டு எப்போதும் மூடியிருக்க வேண்டும் என்று பணியாளா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மழை பெய்தால் நெல் மூட்டைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டு விடாதவாறு தாா்ப்பாய்களை கொண்டு முழுமையாக மூடியிருக்க வேண்டும் என்று அங்கு பணியாற்றுவோருக்கு அறிவுரை வழங்கினாா். இதையடுத்து, திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்துக்கு அருகிலேயே ரூ. 14.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டு, வரும் 3,000 மெ.டன் அளவு கொண்ட 5 நெல் சேமிப்புக் கிடங்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அருள் வனிதா, உதவி மேலாளா் ஜெயவேல் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com