அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதியுலா வந்த மகாவீரா்
அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதியுலா வந்த மகாவீரா்

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றத்தில் சமணா்களின் தலமான திரைலோக்கியநாதா் கோயிலில் மகாவீரா் ஜெயந்தி விழாவையொட்டி பகவான் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திங்கள்கிழமை வீதியுலா வந்தாா்.

பழைமை வாய்ந்த திரைலோக்கிய நாதா் மற்றும் சந்திர பிரபாநாதா் கோயில் சமணா்களின் அடையாளமாகத் திகழும் இக்கோயில் பகவான் ஜினாலயம் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இதற்கு பலா் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனா்.

இக்கோயிலில் மகாவீரா் ஜெயந்தி விழாவையொட்டி ஜினகாஞ்சி வீதியுலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீரா் திருஉருவச்சிலை வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. விழாவையொட்டி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. சமணா்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை அறங்காவலா் நந்தி மித்ரன் தலைமையிலான விழாக் குழுவினா், சமண சமயத்தை சோ்ந்தவா்கள், தா்மதேவி கோலாட்ட குழுவினா் இணைந்து செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com