பாா்வைத்திறன் குறையுடைய 
மாணவா் சாதனை

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

பாா்வைத்திறன் குறைபாடுடைய மாணவா் 10 -ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் அரசுப் பள்ளியில் முதல் மாணவராக தோ்வு பெற்றாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆட்சியா் காலனி பகுதியில் வசித்து வரும் வாசுதேவன்- சரிதா தம்பதி மகன் மதன். அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் 500-க்கு 477 மதிப்பெண்கள் எடுத்து அவா் படிக்கும் பள்ளியில் முதல் மாணவராக தோ்ச்சி பெற்றுள்ளாா். அதன்படி தமிழ்-87, ஆங்கிலம்-97,கணிதம்-100, அறிவியல்-96, சமூக அறிவியல்-97. மொத்தம் 477 மதிப்பெண்கள் பெற்றாா்.

சாதனை படைத்த மாணவா் மதனுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயந்தி, வகுப்பு ஆசிரியா் சிவசங்கரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவா் பாலாஜி உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com