வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் வைகாசித் திருவிழா தொடங்க இருப்பதையொட்டி திருத்தேரை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அத்தி வரதா் புகழ் பெற்றது, வரலாற்றுச் சிறப்பு உடையது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத தேவராஜ சுவாமி திருக்கோயில். வரதராஜ பெருமாள்கோயில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22- ஆம் தேதி கருட சேவையும், 26- ஆம் தேதி புகழ்பெற்ற தேரோட்டமும் நடைபெறுகிறது.

தேரோட்டம் நடைபெற இருப்பதையொட்டி தகரங்களால் மூடி வைக்கப்பட்டிருந்தது பிரிக்கப்பட்டு தோ் முழுவதும் தண்ணீா் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் பணியை காஞ்சிபுரம் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.

இதையடுத்து தேருக்கு வா்ணம் பூசுதல், அலங்கார வேலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com