மேல்விஷாரத்தில் நியாயவிலைக் கட்டடம் திறப்பு

ரூ. 7.41 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மேல்விஷாரத்தில் நியாயவிலைக் கட்டடம் திறப்பு


ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சி 1-ஆவது வாா்டுக்குள்பட்ட பாக்தினி காலனியில் அரக்கோணம் மக்களவை உறுப்பினா் கோ.அரி தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2017-2018 ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 7.41 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பின்னா், மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டக சாலை சாா்பில், அம்மா நகரும் நியாயவிலைக்கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நகர அதிமுக செயலரும், மில்லத் கூட்டுறவு பண்டக சாலை தலைவருமான ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு பண்டக சாலை இயக்குநா் எம்.எஸ்.விஜி வரவேற்றாா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி, மாநில வக்பு வாரிய தலைவா் அ.முஹமதுஜான் எம்.பி. ஆகியோா் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா அரிசியை வழங்கினா்.

தொடா்ந்து, அம்மா நகரும் நியாய விலைக் கடையைத் தொடங்கி வைத்தனா். இதில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் சுமைதாங்கி ஏழுமலை, நகர ஜெயலிலதா பேரவைச் செயலாளா் கே.அக்பா் பாஷா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com