ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசுப் பள்ளி மாணவா்கள்

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட வி.சி.மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.
ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட வி.சி.மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.
ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட வி.சி.மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.

ராணிப்பேட்டை: வி.சி.மோட்டூா் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதைக் கைவிட்டு, ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க ஒதுக்க வேண்டும் என வி.சி.மோட்டூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பொதுமக்கள் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். அப்போது வி.சி.மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் பெற்றோா்களுடன் திரண்டு வந்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில், வாலாஜா வட்டம் வி.சி.மோட்டூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், ஊராட்சிக்குச் சொந்தமான காலி இடத்தில் பள்ளிக் கட்டடம், விளையாட்டு மைதானம் அமைத்து, பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும் என நீண்ட நாள்களாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இச்சூழலில் மேற்கண்ட ஊராட்சி காலி இடத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதைக் கைவிட்டு, மாற்று இடத்தில் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கட்டடம், நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com