ராணிப்பேட்டை பொன்னை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

பொன்னை ஆற்றில் இன்னும் சில மணி நேரங்களில் 12 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னை ஆறு.
பொன்னை ஆறு.

பொன்னை ஆற்றில் இன்னும் சில மணி நேரங்களில் 12 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட தகவலில். ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் கலவ குண்டா, அணையிலிருந்து சுமார் 12,000 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் பொன்னை அணைக்கட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எனவே இளம் குழந்தைகள், பெரியவர்கள் முதியோர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் தேங்கியுள்ள நீர் மற்றும் ஆற்றில் உள்ள நீர் நிலைகளிலும் குளிக்கச் செல்லாமலும் வேடிக்கை பார்க்க ஆற்றில் இறங்கிச் செல்லாமல் இருந்து உயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்படியும், ஆற்றில் குளிப்பவர்கள் வேடிக்கை பார்ப்பவர்கள் விளையாடுபவர்களை உடனடியாக வெளியேற சொல்லவும். 

மேலும் ஆற்றங்கரை ஓரத்தில் குடியிருப்போர் அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com