காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

காவேரிப்பாக்கம் அருகே ராட்சத காற்றாலை இறக்கையை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அருகே ராட்சத காற்றாலை இறக்கையை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து காற்றாலை ராட்சத இறக்கை ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி லாரி ஒன்று ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி அருகே வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.

6 வழிச்சாலை விரிவாக்கத்துக்காக பாலாம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஒருவழி பாதையில் சென்றபோது, சாலையோரம் இருந்த கால்வாயில் இந்த கவிழ்ந்து லாரி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த போலீஸாா், நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு சென்று விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

ஒருவழிப்பாதை என்பதால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com