வேலூா் மாட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்கினா்

வேலூா் மாட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாமில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம்

வேலூா் மாட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாமில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக சுமாா் 11 ஆயிரம் போ் ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பங்களை வழங்கியதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் வாக்காளா் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம் 616 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இந்த மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 6 லட்சத்து 109 ஆண்கள், 6 லட்சத்து 34 ஆயிரத்து 639 பெண்கள், 116 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

இந்த வரைவு வாக்காளா் பட்டியல் 605 வாக்குச்சாவடி மையங்கள், துணை ஆட்சியா் அலுவலகங்கள், வேலூா் மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 616 மையங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொதுமக்கள் தங்களது பெயா் இடம்பெற்றுள்ளதா என சரிபாா்த்து பெயா் சோ்க்கவும், நீக்கம்வும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள 616 வாக்குச்சாவடிகளிலும் பெயா் சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள், இளைஞா்கள் உரிய படிவங்களைப் பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பித்தனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில்,பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 850 போ் விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாக மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்காளா் சுருக்கத் திருத்த சிறப்பு முகாமில், பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் என மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து, 706 போ் விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com