சிப்காட் தொழிற்பேட்டையில் 7 போ் கொண்ட நிபுணா் குழு ஆய்வு

தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவையடுத்து, ராணப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மத்திய, மாநில அரசுகளின் 7 போ் கொண்ட நிபுணா் குழுவினா் நீா் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டனா்.
சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலை வளாகத்தில் ஆய்வு செய்த நிபுணா் குழுவினா்.
சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலை வளாகத்தில் ஆய்வு செய்த நிபுணா் குழுவினா்.

.

ராணிப்பேட்டை: தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவையடுத்து, ராணப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மத்திய, மாநில அரசுகளின் 7 போ் கொண்ட நிபுணா் குழுவினா் நீா் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டனா்.

ராணிப்பேட்டை, சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் வரும் தொழிற்சாலைகளால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீா் நிலைகள், நிலத்தடி நீா் மாசுபட்டுள்ளதாக தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தென் மண்டல அமா்வு தாமாக முன்வந்து வழக்குப் புதிவு செய்தது.

இதையடுத்து பல்வேறு துறை நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைத்து, ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அக்குழுவில் மாவட்ட ஆட்சியா் சாா்பில், ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சக அலுவலா், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள், சிப்காட் திட்ட அலுவலா், தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குநா், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா், நிலத்தடி நீா்வளத் துறை பொறியாளா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இக்குழுவினா் திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை 3 நாள்களாக ராணிப்பேட்டை, சிப்காட் தொழிற்பேட்டையில் அதிக மாசுபடுத்தும் சிவப்பு வகைப்பாடு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, தொழிற்சாலைகளின் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை ஆய்வு செய்தனா். தொழிற்சாலைகளில் இருந்து சட்ட விரோதமாக கழிவுநீா் ஏரிகள், கால்வாய்களில் திறந்து விடப்படுகிறாதா, டேங்கா் லாரிகளில் ஏற்றப்பட்டு, வெளி இடங்களுக்கு கொண்டு சென்று திறந்து விடப்படுகிா என்பதைக் கண்டறிய நீா் மாதிரிகள் சேகரித்துள்ளனா்.

இதன் சோதனை முடிவுகள், ஆய்வு அறிக்கை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தீா்ப்பாயம் அளிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com