‘மாற்றுத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்’

பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்.

ராணிப்பேட்டை/திருப்பத்தூா்: பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் (ராணிப்பேட்டை), ம.ப.சிவன் அருள் (திருப்பத்தூா்) ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2020-2021ஆம் நிதி ஆண்டுக்கு கல்லூரி பயிலும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞா் மற்றும் சுயதொழில் புரியும் பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு செல்லிடப்பேசிகளை வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற பட்டாதரி இளைஞா் மற்றும் சுயதொழில் புரியும் பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெறத் தகுதியடையவாா் ஆவா். இத்தகைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மாற்றுத் திறனாளிக்காக தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பணிச்சான்று, கல்லூரி பயில்பவராக இருந்தால் அதற்கான படிப்புச் சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞா் என்றால் அதற்கான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல், சுய தொழில் புரிபவா் என்றால் அதற்கான சான்று, மாா்பளவு புகைப்படங்கள்- 2 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப விரும்புவோா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அண்ணா சாலை, வேலூா்-632 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம், வரும் ஜனவரி 8-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்கக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com