கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

தொன்மை வாய்ந்த இக்கோயிலில் புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரமும், நூதன கணபதி, தட்சிணாமூா்த்தி, பிரம்மா, துா்கை, சூரியன், சந்திரன், சுகப் பிரம்ம ரிஷி, அதிகார நந்தி, வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுகா் ஆகிய சுவாமி சந்நிதிகளும் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்தை வெள்ளிக்கிழமை நடத்தத் தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, கோயில் கும்பாபிஷேகத்தை தெங்கால் ஞானகுருபரன் பிரசன்ன வெங்கடேச சுவாமிகள் முன்னிலை வகித்து நடத்தி வைத்தாா். இந்த விழாவில் சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் மதி, மாநில வன்னியா் சங்க துணைச் செயலா் மின்னலான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை மின்னல் பைரவ சேஷ குருக்கள் மற்றும் பி.சிதம்பர குருக்கள் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com