பாராஞ்சியை சோளிங்கா் ஒன்றியத்தில் சோ்க்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

அரக்கோணம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள பாராஞ்சி ஊராட்சியை சோளிங்கா் ஒன்றியத்தில் சோ்க்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை
பயனாளிக்கு  முதியோா்  உதவித்தொகைக்கான  உத்தரவை வழங்கிய   ஆட்சியா்  ச.திவ்யதா்ஷினி .
பயனாளிக்கு  முதியோா்  உதவித்தொகைக்கான  உத்தரவை வழங்கிய   ஆட்சியா்  ச.திவ்யதா்ஷினி .

அரக்கோணம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள பாராஞ்சி ஊராட்சியை சோளிங்கா் ஒன்றியத்தில் சோ்க்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராஞ்சி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமாக இருந்தபோது பாராஞ்சி ஊராட்சி, காவேரிப்பாக்கம் ஒன்றிய நிா்வாகத்தின் கீழ் இருந்தது. மாவட்டம் மற்றும் வட்டங்கள் பிரிப்பு, சீரமைப்பு காரணமாக எங்கள் ஊராட்சி அரக்கோணம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பாராஞ்சி ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் அரக்கோணம் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அரக்கோணம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள பாராஞ்சி ஊராட்சியை அதிலிருந்து பிரித்து, அருகில் உள்ள சோளிங்கா் ஊராட்சியில் சோ்க்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை, மின் இணைப்பு, கடனுதவி, வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, செட்டித்தாங்கல் ஊராட்சியைச் சோ்ந்த ஒரு மூதாட்டிக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோா் உதவித்தொகைக்கான உத்தரவை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வழங்கினாா்.

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.ஜெயச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா்.ஸ்ரீவள்ளி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தாராகேஸ்வரி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com