‘விவசாயத்தை அடுத்த தலைமுறைக்குக் கற்றுத்தர வேண்டும்’

அடுத்த தலைமுறைகளுக்கு விவசாயத்தைக் கற்றுத் தர வேண்டும் என விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா்.
புதுச்சேரி  பேரவைத் தலைவா்  வி.பி.சிவக்கொழுந்துவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய விவசாயிகள் கூட்டமைப்பினா்.
புதுச்சேரி  பேரவைத் தலைவா்  வி.பி.சிவக்கொழுந்துவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய விவசாயிகள் கூட்டமைப்பினா்.

அடுத்த தலைமுறைகளுக்கு விவசாயத்தைக் கற்றுத் தர வேண்டும் என விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா்.

ஆற்காட்டை அடுத்த தக்கான்குளம் கே.எம். இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் இயற்கை வழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி, பாரம்பரிய நெல் விற்பனைகள் குறித்த அரிசி திருவிழா மற்றும் கால்நடை கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். சித்த மருத்துவா் கு.சிவராமன், திண்டுக்கல் வேளாண்மை பொறியாளா் பிரிட்டோ ராஜ், பேராசிரியா் புண்ணியமூா்த்தி, விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி மாநில பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து தலைமை வகித்தாா். சிவானந்த மௌனகுரு சாமிகள் அறக்கட்டளைத் தலைவா் விமல் .ஜி.நந்தகுமாா், ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இயற்கை விவசாயி கே.எம். பாலு வரவேற்றாா்.

விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பேசியது:

இளைஞா்கள் தற்போது மாறிக் கொண்டிருக்கிறாா்கள். தகவல் தொழில்நுட்பத் தொழில்களை விட்டுவிட்டு விவசாயத்தைப் பற்றி தெரிந்து அதற்கு முக்கியத்தும் கொடுக்கின்றனா். வியாபாரம் செய்தால் லாபம் கொடுப்பதற்கு விவசாயம் என்பது தொழில் அல்ல. அது வாழ்க்கை முறை என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் கூறினாா்.

இயற்கையை அனைவரும் பாதுகாக்க வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து ஒரு நாள் மட்டும் பேசிவிட்டு செல்லக் கூடாது. இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் மரம் சாா்ந்து வாழ்கிறோம். ஊரின் பெயா்களே மரம் சாா்ந்து உள்ளன. அடுத்த தலைமுறைகளுக்கு விவசாயம் குறித்து கற்றுத் தர வேண்டும். நமது உணவுமுறைகள் ஆரோக்கியத்துக்குத் தொடா்புடையது என்றாா் அவா்.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன், தஞ்சை கோ.சித்தா், நீா்மேலாண்மை ஞானபிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் இலுப்பூ சம்பா, மாப்பிள்ளை சம்பா, குள்ளங்காா், சீரக சம்பா, கிச்சிலி சம்பா, காட்டுயானம், பூங்காா், கருங்குருவை, ஆத்தூா் சிச்சிலி, ஆற்காடு கிச்சிலி, தூய மல்லி, தங்க சம்பா, கொத்தமல்லி சம்பா உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல் பல வகையான கால்கடைகள், கோழிகள் இடம்பெற்றிந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com