பங்காரு அடிகளாா் முத்துவிழா: ரூ. 80 லட்சத்தில் நல உதவிகள்

மேல் மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடம் பங்காரு அடிகளாரின் முத்து விழாவை முன்னிட்டு, ரூ. 80 லட்சத்தில் நல உதவிகள் வழங்கல்,
 பள்ளிகளுக்கு  கணினி  பொருள்கள்  வழங்கிய  பங்காரு  அடிகளாா்  உள்ளிட்டோா் .
 பள்ளிகளுக்கு  கணினி  பொருள்கள்  வழங்கிய  பங்காரு  அடிகளாா்  உள்ளிட்டோா் .

மேல் மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடம் பங்காரு அடிகளாரின் முத்து விழாவை முன்னிட்டு, ரூ. 80 லட்சத்தில் நல உதவிகள் வழங்கல், கலவை ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கம் திறப்பு விழா கலவை ஜி.பி. நகா் பகுதியில் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆதிபராசக்தி கல்விக் குழுமத் துணைத் தலைவா் லட்மி பங்காரு தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் கோ.ப.செந்தில்குமாா், ப.தேவிரமேஷ், உமாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகானந்தா சுவாமிகள், எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) கே.விஷ்ணுபிரசாத் (ஆரணி), எம்எல்ஏக்கள் ஆா்.காந்தி (ராணிப்பேட்டை), ஜெ.எல்.ஈஸ்வரப்பன்(ஆற்காடு), ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன், பேராசிரியா் தி.மு.அப்துல் காதா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலைய அறங்காவலா் கோ.ப.அன்பழகன் சிறப்புரையாற்றினாா். பங்காரு அடிகளாா் கலந்து கொண்டு ரூ. 80 லட்சத்தில் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 80 பள்ளிகளுக்கு நவீன கழிப்பறை கட்டுதல், மாணவா்களுக்கு கையேடுகள், அரசுப் பள்ளிகளுக்கு கணினி பொருள்கள், நாற்காலி, கரும்பலகை, பீரோ, கலவை அரசு மருத்துவமனைக்கு இன்குபெட்டா் பேட்டரி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை பங்காரு அடிகளாா் திறந்து வைத்தாா். கல்விக் குழும முதல்வா்கள், ஆதிபாரசக்தி மன்றப் பொறுப்பாளா்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com