சோளிங்கா், கலவை புதிய வருவாய் வட்டங்கள்அரசாணை வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா், கலவை ஆகியவற்றை தலைமையிடமாக் கொண்டு புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா், கலவை ஆகியவற்றை தலைமையிடமாக் கொண்டு புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அந்த அரசாணையில் அரசு தெரிவித்திருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, வாலாஜா ஆகிய மூன்று வட்டங்களை சீரமைத்து, சோளிங்கரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி சோளிங்கா் வட்டத்துக்கான பரப்பளவு 287.99 சதுர கி.மீ. ஆகும். மக்கள்தொகை 1,61,369 லட்சம். 49 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

அதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு வட்டத்தைப் பிரித்து கலவையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கலவை வட்டத்துக்கான பரப்பரளவு 207,26 சதுர கி.மீ. மக்கள்தொகை 78,773. மொத்தம் 50 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com