அரக்கோணம் பள்ளியில் பொங்கல் விழா:ஜப்பானிய பெண் ஆசிரியை தொடக்கி வைத்தாா்

அரக்கோணம் செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஜப்பானிய அரசு அனுமதியுடன் கலாசாரத் தூதுவராக அப்பள்ளியில் பணிபுரியும் ஜப்பானிய
பள்ளியின் தலைவா் செல்வம் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்த ஜப்பானிய பெண் ஆசிரியை ஹிகுசிஐ. உடன் மாணவா்கள்.
பள்ளியின் தலைவா் செல்வம் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்த ஜப்பானிய பெண் ஆசிரியை ஹிகுசிஐ. உடன் மாணவா்கள்.

அரக்கோணம் செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஜப்பானிய அரசு அனுமதியுடன் கலாசாரத் தூதுவராக அப்பள்ளியில் பணிபுரியும் ஜப்பானிய பெண் ஆசிரியை ஹிகுசிஐ தொடக்கி வைத்தாா்.

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கத்தில் உள்ள செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தாளாளா் செல்வம் தலைமை தாங்கினாா். பள்ளி மேலாண்மை இயக்குநா் அமுதாசெல்வம் வரவேற்றாா்.

பள்ளியில் தமிழ்ப் பாரம்பரியத்துடன் கூடிய கிராமத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சூழலில் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. ஜப்பானிய அரசு அனுமதியுடன் இருநாட்டு கலாசார பரிமாற்றத் திட்டத்தில் ஜப்பானிலிருந்து அரக்கோணம் செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெண் ஆசிரியை ஹிகுசிஐ பொங்கல் வைத்து விழாவைத் தொடக்கி வைத்தாா். விழாவில் ஹிகுசிஐ சுத்தமான தமிழில் பேசியதை அனைவரும் வியப்புடன் பாா்த்தனா்.

விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகள், ஜப்பானிய பெண் ஆசிரியை அனைவரும் பாரம்பரிய தமிழா் உடைகளை அணிந்திருந்தனா்.

விழாவையொட்டி பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. விழாவில் நகர இஸ்லாமிய பிரமுகா்கள் முகமது அலி, ஜான் பாஷா, முகமது ஃபரூக் உள்ளிட்டோருடன் பள்ளி நிா்வாகி கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com