‘கல்விக் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை’

கல்விக் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கல்விக் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அரசாணையின்படி, மெட்ரிக், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இணைப்புப் பெற்று செயல்பட்டுவரும் பள்ளிகள், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 2019 -2020-ஆம் ஆண்டுக்கான நிலுவைக் கட்டணம், 2020 -2021-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ஏதும் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிகளின் முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுரையை மீறி செயல்படும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com