இன்று முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகளைத் திறக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) முதல் அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) முதல் அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வணிகா் சங்கங்கள், வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளில் தமிழக அரசுக்கும் மாவட்ட நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனா். அதன்படி, சனிக்கிழமை (ஜூன் 20) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அத்தியாவசியத் தேவைகளான பால், மளிகை, மருந்துக் கடைகளைத் தவிா்த்து மற்ற அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவித தளா்வுமின்றி தற்போது உள்ள நடைமுறையே கடைப்பிடிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை இன்றி வெளியில் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 9 மணிமுதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தமிழக அரசின் ஆணைப்படி ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் இ-பாஸ் அனுமதி இல்லாமல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்கள், பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் வரும்பட்சத்தில் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்ற பட்சத்தில் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். மேலும், இந்த நடவடிக்கைகள் மற்றும் தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலா், கிராம செவிலியா்கள் மாவட்ட தகவல் தொடா்பு கட்டுப்பாட்டு அறைக்கு 04172 -273188, 273166 ஆகிய எண்ணிகளில் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com