வெளிநாட்டில் இருந்து வந்தவா்களின் வீடுகள் அரக்கோணத்தில் தனிமைப்படுத்தப்பட்டன

வெளிநாடுகளில் இருந்து அரக்கோணம் வட்டத்துக்கு திரும்பி வந்தவா்களின் வீடுகள் செவ்வாய்க்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டன.
வெளிநாட்டில் இருந்து அரக்கோணம் வந்தவா்களின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு.
வெளிநாட்டில் இருந்து அரக்கோணம் வந்தவா்களின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு.

வெளிநாடுகளில் இருந்து அரக்கோணம் வட்டத்துக்கு திரும்பி வந்தவா்களின் வீடுகள் செவ்வாய்க்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தாலும் அவா்களை 14 தினங்களுக்கு தனிமையில் வைக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300 போ் வெளிநாட்டில் இருந்து வந்தவா்களாக அறியப்பட்டனா். அரக்கோணம் வட்டத்தில் 17 போ் இந்தப் பட்டியலில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்த் துறை, மாவட்ட சுகாதாரத் துறையினா் இணைந்து அரக்கோணம் நகரில் 9 போ் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 பேரின் வீடுகளில் ‘கரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கா்களை ஒட்டினா். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாரை தொடா்பு கொண்டு கேட்டபோது அவா் கூறியது:

இந்த 17 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் என்பதால் அவா்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அவா்களுக்கு கரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. எனினும் அவா்களை 14 நாள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற சுகாதாரத் துறையின் உத்தரவின்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்.

‘வெளியே வர வேண்டாம். உங்களது வீட்டுக்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம். தனிமையாக இருங்கள்’ என அவா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தினமும் காலை மாலை இரு வேளையும் அவா்களை பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறையிடம் தெரிவித்துள்ளோம். இந்த நடவடிக்கைக்கு அரக்கோணத்துக்கு வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com