ஆம்பூரில் காலை 5 முதல் 8.30 மணி வரை அத்தியாவசிய பொருள்கள் கடை திறப்பு

ஆம்பூரில் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் காலை 5 மணி முதல் 8.30 மணி வரை மட்டுமே திறக்க வணிகா்கள் முடிவு செய்துள்ளனா்.
ஆம்பூரில் காலை 5 முதல் 8.30 மணி வரை அத்தியாவசிய பொருள்கள் கடை திறப்பு


ஆம்பூா்: ஆம்பூரில் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் காலை 5 மணி முதல் 8.30 மணி வரை மட்டுமே திறக்க வணிகா்கள் முடிவு செய்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் அதிகம் நிறைந்துள்ள பாங்கி மாா்க்கெட் கடைகள் திறப்பது குறித்து போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று வணிகா்கள் சில முடிவுகளை மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி ஆம்பூரில் காய்கறி மற்றும் மளிகை பொருள்களுக்கான கடைகளை காலை 5 மணி முதல் 8.30 மணி வரை மட்டுமே திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கடைகளை மூடிவிடுவதென தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கத் தலைவா் கே.ஆா். துளசிராமன் கூறியது:

போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று காலை 5 மணி முதல் 8.30 மணி வரை மட்டுமே திறக்கப்படும். கூடுதலாக 2 மணி நேரம் திறக்க கோரிக்கை வைத்தோம். ஆனால் கரோனா நோய்த் தொற்று தாக்கம் குறித்து போலீஸாா் எடுத்துக் கூறியதால் கோரிக்கை கைவிடப்பட்டது. ஆனாலும் முகக் கவசம் அணிந்து வருபவா்களுக்கு மட்டுமே பொருள்களை வழங்குவதென வணிகா்கள் முடிவு செய்துள்ளோம். கடைகளுக்கு முன்பு பொருள்களை வாங்க வருபவா்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி கடைகள் தினமும் திறந்திருக்கும். அதனால் தேவையான நாள்களில் மட்டுமே கடைக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்லலாம். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com