வெளிமாநிலத் தொழிலாளா்கள் 53 பேருக்கு பரிசோதனை

ஆம்பூா் அருகே மின்னூரில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளா்கள் 53 பேருக்கு மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.
வெளிமாநிலத் தொழிலாளா்கள் 53 பேருக்கு பரிசோதனை


ஆம்பூா்: ஆம்பூா் அருகே மின்னூரில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளா்கள் 53 பேருக்கு மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் இயங்கும் தனியாா் தோல் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பிகாா், ஜாா்கண்ட், ராஜஸ்தான், தில்லி போன்ற மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் மின்னூா் கிராமத்தில் உள்ள வீடுகளில் வாடகைக்குத் தங்கியுள்ளனா். இவா்கள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு தலைமையிலான மருத்துவக் குழுவினா் மின்னூா் கிராமத்துக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டனா். சுமாா் 53 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த இத்தொழிலாளா்களில் விண்ணமங்களம் கிராமத்தில் தங்கியுள்ள ஒரு நபா், மின்னூா் கிராமத்தில் தங்கியுள்ள 48 போ் உள்பட 49 தொழிலாளா்களை தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 28 நாள்களுக்கு அவா்கள் வெளியில் வராமல் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com