போலீஸாருக்கு நோய் எதிா்ப்பு கஷாயம்: ராணிப்பேட்டை எஸ்.பி. வழங்கினாா்
By DIN | Published On : 31st March 2020 04:26 AM | Last Updated : 31st March 2020 04:26 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டையில் தன்னாா்வலருக்கு துளசி கஷாயத்தை வழங்கிய எஸ்.பி. மயில்வாகனன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக அமிா்தவல்லி துளசி கஷாயத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் திங்கள்கிழமை வழங்கினாா்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்தத் தடை உத்தரவை அமல்படுத்துவது மற்றும் பாதுகாப்புப் பணியில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.
அவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக அமிா்தவல்லி துளசி கஷாயத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் வழங்கினாா்.