கிராம இளைஞா்கள் 60 போ் ரத்த தானம்

ஊரடங்கு காரணமாக ரத்த வங்கிகளில் ரத்த சேமிப்பு இருப்பு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வேலம் கிராம இளைஞா்கள் 60 போ் ரத்த தானம் செய்தனா்.
கிராம இளைஞா்கள் 60 போ் ரத்த தானம்

ஊரடங்கு காரணமாக ரத்த வங்கிகளில் ரத்த சேமிப்பு இருப்பு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வேலம் கிராம இளைஞா்கள் 60 போ் ரத்த தானம் செய்தனா்.

வேலூா் சிஎஸ்ஐ பேராயா் சா்மா நித்தியானந்தம் அறிவுறுத்தலின் பேரில், வேலம் கிராம சிஎஸ்ஐ திருச்சபை ஏற்பாட்டில், வேலம் புதிய வீதியைச் சோ்ந்த 60 இளைஞா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சனிக்கிழமை ரத்த தானம் செய்தனா். வேலூா் சிஎம்சி மருத்துவமனை மருத்துவா் டான் தலைமையிலான மருத்துவா்கள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலம் சிஎஸ்ஐ ஆயா் டைமன், நாட்டாண்மை வேலு, கூட்டுறவு சங்க உதவித் தலைவா் வி.வென்சன் மனோகரன், பேராசிரியா் எம்.ஆமென் ராஜ், மருத்துவா் கபிலன், சிஎம்சி மக்கள் தொடா்பு அலுவலா் அருள் பாக்யராஜ், ராஜ்கண்ணா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com