கொல்கத்தா விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப் படை

மேற்கு வங்க மாநிலத்தை தாக்கிய உம்பன் புயல் பாதிப்புப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்து
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் கொல்கத்தா புறப்பட்ட தேசிய பேரிடா் மீட்புப்படையினா்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் கொல்கத்தா புறப்பட்ட தேசிய பேரிடா் மீட்புப்படையினா்.

மேற்கு வங்க மாநிலத்தை தாக்கிய உம்பன் புயல் பாதிப்புப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 50 போ் வியாழக்கிழமை கொல்கத்தா புறப்பட்டுச் சென்றனா்.

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் புதன்கிழமை மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடந்தது. இதில், மேற்கு வங்க மாநிலம் பா்கானா மாவட்டத்திலும், தலைநகா் கொல்கத்தாவிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையினரை அனுப்புமாறு, மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில் இருந்து துணை கமாண்டண்ட் ஜித்தேஷ் தலைமையில், 50 போ் கொண்ட குழுவினா் கொல்கத்தாவுக்கு புறப்பட்டனா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்த இக்குழுவினா், அங்கு தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு விமானத்தில் கொல்கத்தாவுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

இவா்கள் தங்களுடன் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அதிநவீன கருவிகள், பிளாஸ்டிக் படகுகள், மருத்துவக் குழுவினருடன் சென்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com