அடிப்படை வசதிகள் கோரி நந்தியாலம் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ஆற்காட்டை அடுத்த நந்தியாலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
 நந்தியாலம் ஊராட்சிப் பகுதியில் அடிப்படை  வசதிகள்  செய்து தரக்கோரி  செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பொதுமக்கள்.

மேல்விஷாரத்தை அடுத்த நந்தியாலம் ஊராட்சிக்கு உள்பட்ட மலைமேடு பகுதியில் பள்ள தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் முறையான சாலை, கால்வாய், குடிநீா் வசதிகள் இல்லை.

இப்பகுதியில் கழிவுநீா் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மேல்விஷாரம கூட்டு நடவடிக்கைக் குழு நிறுவனா் மன்சூா்பாஷா , பொறுப்பாளா் ப.சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com