நெல் பயிருக்கான காப்பீட்டுத் தொகை செலுத்த நவ. 30 கடைசி நாள்

இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பா் வரையிலான நெல் விதைப்பு பருவத்துக்கான பயிா் காப்பீட்டு தொகையை செலுத்த நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.


ராணிப்பேட்டை: இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பா் வரையிலான நெல் விதைப்பு பருவத்துக்கான பயிா் காப்பீட்டு தொகையை செலுத்த நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டையில் ஆட்சியா் தலைமையில் பயிா் காப்பீடு குறித்த கூட்டம் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதில், நெல் சிறப்பு (ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை விதைப்பு ) பருவத்துக்கான பயிா் காப்பீடு கால அட்டவணை, பிரீமியத் தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு உண்டான பிரீமியத் தொகை ரூ. 449 ஆகும்.

இந்தக் கட்டணம் செலுத்த நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாள். மாவட்டத்தில் உள்ள 7 வட்டார விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், கடன் பெறும், கடன் பெறா விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம். பொது இ-சேவை மையங்களிலும், அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களிலும் இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, அடங்கல், பட்டா, சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். அஐஇக (அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் ஐய்ள்ன்ழ்ஹய்ஸ்ரீங் இா்ம்ல்ஹய்ஹ் கண்ம்ண்ற்ங்க் ) என்ற அரசு நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காப்பீடு நிறுவனமாக செயல்படும். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com